பள்ளியில் எந்ரேமும் மதுபோதை.. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிக்கு எந்நேரமும் மதுபோதையில் வரும் தலைமைய ஆசிரியரை பணி இடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அமலதாஸ். இவர் பள்ளிக்கு வந்த பிறகு மது அருந்திவிட்டு பள்ளி வளாகத்திலேயே படுத்து தூங்கிவிட்டு போதை தெளிந்ததும் எழுந்து செல்வதாக புகார் எழுந்தது. இந்த நிலை தினமும் தொடர்ந்ததால், இதுகுறித்து ஊர் மக்கள் கல்வி அதிகாரிளுக்கு புகார் செய்தனர்.

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டதை அடுத்து, வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமலு, செல்லங்குப்பம் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியில் தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு மதுபாட்டிலுடன் பள்ளி வளாகத்திலேயே படுத்து உருண்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வட்டார கல்வி அலுவலர் விசாரணை அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரின் உத்தரவின்பேரில், கல்வி மாவட்ட அலுவலர் உஷாராணி மதுபோதையில் பள்ளிக்கு வந்த அமலதாசை பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

More News >>