திரிஷாவின் ldquoமோகினி டிரைலர் ரிலீஸ்
நடிகை திரிஷா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மோகினி திரைப்படத்தின் டிரைலர் இன்று ரிலீசானது.
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள திகில் படம் மோகினி. அரண்மனை 2, நாயகி ஆகிய திகில் திரைப்படங்கள் வரிசையில் மற்றுமொரு திகில் படமான மோகினி என்ற படத்தில் திரிஷா பேயாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஜாக்கி பாக்னனி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு விவேக்&மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தின் இசை ஜனவரி 12ம் தேதி வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.நடிகை திரிஷாவின் படம் ஒன்றுக் கூட 2017ம் ஆண்டில் வெளிவரவில்லை. அதனால், டிரெண்டிற்கு ஏற்ற மாதிரி தனது கதாப்பாத்திரங்களை மாற்றிக் கெண்டு தொடர்ந்து திகில் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
சரி, திரிஷாவின் மிரளவைக்கும் நடிப்பில் வெளியாகவுள்ள மோகினி படத்தின் டிரைலர் இதோ..