அக்டோபர் 2 வெளியாகும் சர்கார் பாடல்கள் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் தளபதி இணைந்து நடித்து வரும் மூன்றாவது திரைப்படம். ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் சர்கார் திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சர்கார் திரைப்படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் மாதம் 22ந் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.    தளபதி விஜய், சமந்தா, கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு, என பிரபலங்கள் நடித்து வரும் இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.     இந்நிலையில் சர்கார் திரைப்படத்தின் பாடல்களை அக்டோபர் மாதம் 2ம் தேதி பிரமாண்டமாகவும் வித்தியாசமாகவும் வெளியிட முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ்.
More News >>