செக்க சிவந்த வானம் படத்தின் டிரைலர் ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது.

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் "செக்க சிவந்த வானம்". பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்கள் முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஜோதிகா என அனைவரின் கதாபாத்திரங்களும் அந்த பர்ஸ்ட் லுக்கில் இடம் பிடித்தன.

இந்நிலையில் படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் இன்று காலை 10 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி, செக்க சிவந்த வானம் படத்தின் டிரைலர் சில மணி நேரம் முன்பு ரிலீஸாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் படமாகியுள்ள செக்க சிவந்த வானம் தெலுங்கு மொழியிலும் மொழி பெயர்ப்பாகி செப்டம்பர் மாதம் 28ந் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>