காதல் பட விருச்சகாந்த் பாபுவுக்கு அடைக்கலம் கொடுத்த நல்லமனம்!
'காதல்' படத்தில் 'நடிச்சா ஹீரோதான் சார்' என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விருச்சகாந்த். பாபு. தற்போது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், சூளை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே நடைபாதையில் தங்கியிருந்தார். பாபுவுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். சூளையில் அனைவரும் வசித்து வந்த நிலையில் பெற்றோர் இறந்து விட, பாபுவின் தம்பி, தங்கைக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வருத்தமடைந்த பாபு, கோயிலில் தஞ்சமடைந்திருக்கிறார்.
இந்தநிலையில்,பாபு பற்றிய செய்திகள் வெளியானதையடுத்து, நடிகர் சாய்தீனா, அவரை தன் வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளார். அதிக மன அழுத்தத்தால் பாபு பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'பட இயக்குநர்கள் பாபு போன்ற நலிந்த கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சான்தீனா தனது பேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.