டிடி-ஸ்ரீகாந்த் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியன் டி.டி, நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன ஆறு மாதங்களில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு வந்ததாகவும் அதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. ஆனால் டி.டி அதனை மறுத்து வந்தார்.
இந்நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் டி.டி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். விசாரித்து பார்த்தால் அது விவாகரத்து மனு. இருவரும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என சமரச விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுச்சி லீக்ஸ் என்று ட்விட்டரில் வெளியான புகைப்படங்களில் டி.டி.யும் இடம் பிடித்து இருந்தார். அது மட்டும் இல்லையாம் அவர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பது ஸ்ரீகாந்தின் குடும்பத்தாருக்கும் ஸ்ரீகாந்திற்கும் பிடிக்கவில்லையாம். அதன் காரணமாகவே இருவரும் சமரசமாய் பிரிந்து செல்ல முடிவு செய்து குடும்ப நல நீதி மன்றத்தை நாடியதாக தகவல்கள் கசிகின்றன.