கடற்படை பாதுகாப்புக்காக 111 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல்
கடற்படை பாதுகாப்பு பணிகளுக்காக 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 46 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.