மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானையைப் பார்த்து பயணிகள் அச்சமடைந்தனர்.
அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் கிழக்கு மலைப்பாதை வழியாக தேவர்மலை, மடம் ஆகிய ஊர்களுக்கு செல்லம் அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
பேருந்து மலைப் பாதையின் முதல் வளைவில் சென்றபோது அங்கு நடுரோட்டில் யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை சற்று தூரத்தில் நிறுத்தினார். ஆனால் யானை அங்கிருந்து விலகிச் செல்லவில்லை. நீண்ட நேரம் அந்த யானை அங்கேயே நின்றது. இதனால் அங்கு நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், யானை தானாகவே சாலையில இருந்து விலகி வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பயனிகள் நிம்மதியடைந்தனர். அதன் பின்னர், அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றன.