nbsp46 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஆயுதம் ஒப்புதல்

இந்திய ராணுவத்துக்கு ரூ. 46,000 கோடிக்கு ஆயுதம், ஹெலிகாப்டர் வாங்க பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவத்தினருக்கு தாக்குதல் நடவடிக்கை, தேடுதல், மீட்பு கண்காணிப்புக்கு போன்ற பாதுகாப்பு பணிகளுக்கு ஹெலிகாப்டர் தேவைப்படுகிறது. எனவே எந்த வகையான ஹெலிகாப்டர் சிறந்தது என்பதை தேர்ந்தெடுத்தனர்.   ராணுவ கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ரூபாய் 21,000 கோடியும்,  பீரங்கிகள் வாங்குவதற்கு ரூ 3,364 கோடியும் வழங்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறையின் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ரூ.24,879 கோடி மதிப்பிலான சில கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.    ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தில்லியில் நடைபெற்றது.
More News >>