சூர்யாவின் 36வது படத்தில் மலர் டீச்சர்?
செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி போட இருக்கிறார் சாய் பல்லவி.
சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அடுத்ததாக செல்வராகவன் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது சூர்யாவுக்கு ஜோடி போட இருக்கும் ஹீரோயின் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வலம் வந்த சாய்பல்லவி நடிக்கவுள்ளார். சாய்பல்லவிக்கு இது இரண்டாவது படமாகும். முதல் படம் ‘கரு’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இதன் படப்படிப்பு ஜனவரி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.