மேகாலயா மாநிலத்தின் புதிய கவர்னராக ததாகதா ராய் பதவியேற்பு
மேகாலயா மாநிலத்தின் புதிய கவர்னராக மேற்கு வங்களாத்தை சேர்ந்த ததாகதா ராய் பதவி ஏற்றுள்ளார்.
மேகாலயா மாநிலத்தின் கவர்னராக கங்கா பிரசாத் பதவியில் இருந்து வந்தார். இவர், சிக்கிம் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, திரிபுரா மாநில முன்னாள் கவர்னராக இருந்த ததாகதா ராய் மேகாலயா கவர்னராக கடந்த 21ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இதன்பிறகு, மேகாலயா மாநில தலைமை நீதிபதி முகமது யாகூப் மிர் முன்னிலையில் ததாகதா ராய் நேற்று கவர்னராக பதவி ஏற்றார்.இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி, ராஜ்பவனில் நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.