இன்றுடன் நிறைவுப் பெற்றது அமர்நாத் யாத்திரை
காஷ்மீரில் பனிலிங்கத்தை தரிசனம் செய்து வந்த அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
காஷ்மீரில் அமர்நாத் குகை கோவிலில் உருவான பனிலிங்கத்தை காண ஆண்டுதோறும் இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில், நடப்பு ஆண்டில் ஜம்முவில் இருந்து பாகல் காம் மற்றும் பகவதி நகர் ஆகிய இரண்டு வழித்தடங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.அமர்நாத் யாத்திரை தொடங்கி 60 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், ரக்ஷா பந்தன் தினமான இன்றுடன் யாத்திரை நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பு ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கியது. கடந்த 60 நாட்களாக நடைபெற்று வந்த அமர்நாத் யாத்திரை இன்றுடன் முடிவைந்துள்ளது. இந்தாண்டு யாத்திரையில் 2 லட்சத்து 84 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய வந்து சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.