மாட்டிறைச்சி சாப்பிட்டுவதே கேரள வெள்ளத்திற்கு காரணம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

மாட்டிறைச்சி சாப்பிடுவதால் தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதாக கூறிய கர்நாடக பாஜக எம்எல்ஏ கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்து 370 பேரை பலி கொண்டது. மேலும், சுமார் 19,500 கோடிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, மழை குறைந்து வரும் காரணத்தால் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுத வருகிறது.

மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், மாட்டிறைச்சி சாப்பிடுவதால் தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் மத்திய அமைச்சருமான பசன்கவுடா பட்டில் யட்னால் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் மேற்கொண்டு கூறுகையில், இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். கேரளாவில் என்ன நடந்தது என்று பாருங்கள். அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில் தான் அங்கு மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது. அவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுவதால் தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More News >>