கலைஞர்nbspபெயரில் தமிழக அரசு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்: திருமாவளவன்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது மற்றும் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு 5 முறை முதல்வர் பதவியில் இருந்த கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறத்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதி 80 ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு 5 முறை முதல்வர் பதவி வகித்தவர். அவரை கவுரவிக்கும் வகையில் பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கல்விப்பணியிலும் கலைஞர் சிறப்பாக பணியாற்றியவர். அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் கலைஞர் பெயரில் தமிழக அரசு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.

கலைஞர் இறந்தபோது, அவரது உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். வரும் 30ம் தேதி நடைபெறும் கலைஞர் இரங்கல் கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனை வைத்து அரசியல் முடிச்சு போடக் கூடாது. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

More News >>