15 பொதுத்துறை வங்கிகள் மூடப்படுமா?
விரைவில் 15 பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
விரைவில், 15 பொதுத்துறை வங்கிகள் மூடப்பட உள்ளதாகவும் அவை ஐந்து பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இது, தவறான தகவல் என்றும், இப்போதைக்கு இது போன்ற எந்த முடிவும் வங்கி நிர்வாகங்கள் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ-யின், ஐந்துதுணை வங்கிகள் சில மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டு அவை எஸ்.பி.ஐயுடனே இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.