2.0 டீஸர் தள்ளிபோட்டதற்கு இதுவே காரணம்: ஷங்கர் விளக்கம்
2.0 படத்தின் டீசர் தள்ளிப்போவதற்கு, ரஜினி கூறியதே காரணம் என்று இயக்குனர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 உருவாகி வருகிறது. படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாய் எடுத்து வரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படம் வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2.0 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால், கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் பாதிப்பால் மக்கள் கடும் வேதனையில் உள்ளனர். இந்நிலையில், 2.0 படத்தின் டீசரை தள்ளிப்போடலாம் என்று ரஜினிகாந்த் கூறியதை அடுத்து படத்தின் டீசர் தள்ளிப்போடப்பட்டது என இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.