கேரள வெள்ளம்: பாட்டுப்பாடி ரூ.10 லட்சம் நிதி திரட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டுப்பாடி மகிழ்வித்து நிவாரண நிதி திரட்டி உள்ளனர்.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல மாவட்டங்கங்கள் நீரிழ் மூழ்கி வெள்ளக்காடானது. மேலும், மழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, கேரளாவில் மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.கேரள மாநிலத்திற்காக பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிவாரண நிதி திரட்டினர்.

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் உச்ச நீதிமன்ற பத்திரிகையாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர்.அமரம் என்ற படத்தில் இருந்து ஒரு மீனவனின் கதையை சொல்லும் பாடலை பாடிய நீதிபதிகள், கேரளாவில் வெள்ளம் வந்தவுடன் முதலில் உதவிக்கு வந்தவர்கள் மீனவர்கள் என்றும் அவர்களுக்காக இந்த பாடலை சமர்ப்பிக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம், ரூ.10 லட்சத்துக்கும் மேல் நிதி திரண்டது.

More News >>