இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் #திமுகதலைவர்ஸ்டாலின்
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கவுள்ள நிலையில், இன்று காலை முதல் ட்விட்டரில் #திமுகதலைவர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்வுள்ளனர். இவர்களுக்கு, பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிக்கப்பட உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை முதல் திமுக குறித்த ட்வீட்டுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, #திமுகதலைவர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திமுக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.