கேரளா வெள்ள சேதங்களை பார்வையிட்டார் ராகுல் காந்தி
மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரளாவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.
ராகுல் காந்தி டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். காலை 8.30 மணிக்கு அவர் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்திறங்கினார்.
அவருக்கு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர், ரகுல் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்று மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
அப்போது, அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கே தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து மேலும் சில பகுதிகளில் பார்வையிடவுள்ளார்.