விராட் -அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற விராட் கோலி&அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி மணமக்களை வாழ்த்தினார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 4 நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 11ம் தேதி இத்தாலியின் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதி ஒன்றில் திருமணம் நடைபெற்றது.மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில், தேனிலவு முடிந்து இந்தியாவுக்கு திரும்பிய புதுமண தம்பதி நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, டெல்லியில் நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துக்கொள்ள மோடிக்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்படி, டெல்லி தாஜ் ஓட்டலில் விராட் கோலி&அனுஷ்கா தம்பதியின் வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினார்.
இதையடுத்து, மும்பையில் வரும் 26ம் தேதி மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலர் கலந்துக் கொள்ள உள்ளனர்.