அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசி...மருத்துவமனையில் சோகம்!
மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட மருத்துவமனையில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை போட்ட நர்சால் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்தியபிரதேசத்தில் விதியை மீறி அனைத்து நோயாளிகளுக்கும் நர்ஸ் ஒருவர் ஒரே ஊசியைப் பயன்படுத்தியுள்ளார். ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்த கூடாது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் விதியாகும்.
இதேபோல, ஊசி சிரஞ்சை டிஸ்டில்லரி வாட்டர் மூலம் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் சாதாரண தண்ணீரை பயன்படுத்தி அவர் சுத்தப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், அவரிடம் ஊசி போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் மயங்கி விழுந்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 25-க்கும் மேற்பட்டோர் மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள், நர்சு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.