பகுதி நேர முதுகலை பட்டப்படிப்புகள் ரத்து... அண்ணா பல்கலைக்கழகம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல பொறியியல் கல்லூரிகளில், பகுதிநேர முதுகலை படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டல வளாக கல்லூரிகளிலும், விழுப்புரத்தில் இயங்கிவரும் பல்கலைகழக கல்லூரியிலும் பகுதிநேர முதுகலை பொறியியல் பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், பகுதி நேர முதுகலை பொறியியல் படிப்புகள் நடப்பு கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார்.

இ.சி.இ.,- சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில், பகுதி நேர முதுகலை பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் இருந்து இந்த படிப்புகள் கைவிடப்படுவதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விடைத்தாள் மறு மதிப்பீட்டில் பெரிய அளவிற்கு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பகுதிநேர முதுகலை பொறியியல் படிப்புகளிலும் முறைகேடு நடக்கலாம் என்ற தகவலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News >>