ஆர்.ஜே.டி கட்சி மூத்த தலைவர் ஹரேராம் யாதவ் சுட்டுக்கொலை
பாட்னா: பீகார் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹரேராம் யாதவ் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர்.
பீகார் மாநிலம் சமாஸ்டிபூர் மாவட்டம் ஷகார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரேராம் யாதவ்(50). ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், இன்று காலை ஹன்சான்பூர் காவல நிலைய எல்லைப்பகுதிக்கு உட்பட்ட சீஹி என்ற பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் யாதவை சரமாரியாக சுட்டனர். இதில், பலத்த காயமடைந்த யாதவ் சம்பவ இடத்தியே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இதில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில், சொந்த வெறுப்பு காரணமாக யாதவை சுட்டு கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்த நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.