மியான்மரில் சோகம்: அணை உடைந்து 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
மியான்மர் நாட்டின் ஸ்வர் சாங் என்ற அணை உடைந்ததை அடுத்து, 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி திடீரென உடைந்தது. இதனால், தண்ணீர் சுமார் 85 கிராமங்கள் மூழ்கின. இதையடுத்து, சுமார் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்பாசனத்திற்காக கட்டப்பட்ட ஸ்வர் சாங் அணையில் முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி 2 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.