இறக்குமதி வரி உயர்வை அடுத்து ஆப்பிள் ஐபோன் விலை அதிகரிப்பு
இந்தியாவில், செல்போன்களுக்கான இறக்குதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, ஆப்பிள் ஐபோன் விலையும் உயர்ந்துள்ளது.
மத்திய அரசு, செல்போன்களுக்கான இறங்குமதி வரியை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதன் தாக்கம், ஐபோன்களின் விலையில் எதிரொலித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மிகவும் விருப்பமாக வாங்கும் போன்களின் ஒன்று ஆப்பிள் ஐபோன். புதிய தொழில்நுட்ப திறன்களுடன் வளர்ச்சியடைந்து வரும் ஐபோன் பல ரகங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால், இந்தியாவிற்கு இறக்குமதியாகும் ஐபோன்களின் விலையில் 3.5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும், கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு, வெளியிடப்பட்ட ஐபோன்களின் விலையில் ஏற்றமில்லை என்பது சற்று ஆறுதலான தகவல்.
அதன்படி, 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் ஙீ, ரூ.89,000ல் இருந்து ரூ.3,430 உயர்ந்து ரூ,92,430க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அதி நவீன ஐபோன்கள் 1,02,000 ரூபாயில் இருந்து 1,05,720 ரூபாய்க்கு என விற்பனையாகிறது.
ஐபோன்களின் விலை பட்டியல் விவரம் இதோ..
இந்த விலை ஏற்றம் குறித்து ஆப்பிள் நிறுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தரத்தில் எந்த வித சமரசத்தையும் விரும்பாத தங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள், தவிர்க முடியாத இந்த விலை ஏற்றத்தினை ஏற்றுக் கொள்வார்கள். அவர்களின் தொடர் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது ” என தெரிவித்துள்ளார்.