ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்ற டுடீ சந்துக்கு ரூ.3 கோடி பரிசு
ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை டுடீ சந்துக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக்.
இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர் வீராங்கணைகள் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவிக்குமா வீரர் வீராங்கணைக்கு அவர்களின் சொந்த மாநில அரசு சார்பில் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த இரண்டு வெற்றிக்கு தலா ரூ.1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக் தெரிவித்தார்.
அதன்படி, இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா திரும்பிய டுடீ சந்துக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக் ரூ.3 கோடிக்கான காசோலையை இன்று வழங்கினார்.