தமிழ் திரையுலகில் முதல்முறையாக களமிறங்கும் அமிதாப்பச்சன்..

தமிழில் முதல் முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில், திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உயர்ந்த மனிதன் என்ற படம் உருவாகவுள்ளது.

இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கப்படுகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தமிழில் முதல் முறையாக நடிக்கவுள்ளார். இவரைதவிர, எஸ்.ஜே.சூர்யா உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

உயர்ந்த மனிதன் படம் குறித்த மேற்கொண்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News >>