குஜராத் புதிய முதல்வராக மீண்டும் விஜய் ரூபானி தேர்வு
அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜ ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, புதிய முதல்வராக மீண்டும் விஜய் ரூபானியை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், இவர் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இதில் 99 இடங்களை பாஜ கைப்பற்றி வெற்றிப்பெற்றது. குஜராத்தில் கடந்த பாஜ ஆட்சியில் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்படலாம் என்ற யூகம் எழுந்தது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டார். இததொடர்பான அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. அதில், குஜராத் சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் ரூபானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், துணை தலைவராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், நிதின படேல் துணை முதல்வராக பொறுப்பேற்கிறார்.
முந்தைய அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்கள் அவர்களின் பொறுப்பை தொடர்வார்கள் என்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பதவி ஏற்கும் விழா விரைவில் நடைபெறும் என பாஜக தலைமையகம் தெரிவித்துள்ளது.