பன்றிக்காய்ச்சல் பீதி- 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைப்பு

சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க ஒரேநாளில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன.

கொடிய வகை தொற்றுநோயாகிய ஆப்பிரிக்க பன்றிக்க்காய்ச்சல், சீனாவில் பரவியது. அந்நாட்டின் 5 மாகாணங்களில் 5 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியபட்டது.

எனவே, இந்த நோய் பாதித்துள்ள மாகாணங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை பிறபகுதிகளுக்கு கொண்டு செல்ல சுகாதாரத்துறை தடை விதித்தது. பன்றி இறைச்சி கடைகளும் மூடப்பட்டன.

இதையடுத்து, பன்றிகள் மூலமாக வேகமாக பரவும் இந்த நோய்த்தொற்றை தடுக்கும் வகையில், இங்குள்ள லியாவ்னிங், ழேஜியாங், ஹேனான், ஜியான்சு மற்றும் அன்ஹுய் ஆகிய மாகாணங்களில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் ஒரேநாளில் கொன்று புதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>