பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை - டி.டி.வி. தினகரன்
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நேற்று வியாழன் அன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்பட்டனர். இந்த தேர்தலில் பணப் பட்டுவாடா செய்தததாக ஒவ்வொரு வேட்பாளரும் மற்றவர்களை குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.டி.வி.தினகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் ஆர்.கே.நகர் தேர்தலில் நல்ல முடிவு வரும் என்றும் கூறினார்.