கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!

தமிழ்வழிக் கல்வியில் படித்து பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, 363 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் முறையாக, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், கடந்த கல்வியாண்டில் நடந்த 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 960 மாணவர்களுக்கு, முதல் முறையாக காமராஜர் விருது வழங்கப்படுகிறது. அதேபோல், 40 அரசுப் பள்ளிகளுக்கு தூய்மை விருதும் வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி பகல் 3 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூன்று வகை விருதுகளையும் வழங்குகிறார்கள்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

More News >>