உத்தரகாண்டில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 13 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தார்ஜ் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்ஜ் பள்ளத்தாக்கில் இன்று மதியம் சென்றுக் கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்த்தாக தகவல் வெளியாகியது. சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, காவல் துறையினர் மற்றும் மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு சடலங்கணை மீட்பு வருகின்றனர். மேலும், பலத்த காயங்களுடன் மீட்ட இரண்டு சிறுமிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பள்ளத்தாக்கில் ஏராளமான விபத்துகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.