கீழச்சுரண்டையில் ஸ்தோத்திர பண்டிகை!
தென்னிந்திய திருச்சபை, திருநெல்வேலி திருமண்டலம், கீழச்சுரண்டை சேகரத்தில் ஸ்தோத்திர பண்டிகை ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1, 2 ஆகிய மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கீழச்சுரண்டை பரிசுத்த பவுலின் ஆலயத்தில் அருணோதய பிரார்த்தனை, கொடியேற்றம், பாலர் மனமகிழ்ச்சிப் பண்டிகை, பெண்கள் கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பண்டிகையின் நிறைவு நாளான ஞாயிறு பிற்பகல் ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெற்றது. அதில் திருநெல்வேலி திருமண்டல பேராயர் அருட்பெருந்திரு ஜே.ஜே. கிறிஸ்துதாஸ் கலந்து கொண்டு தேவ செய்தியளித்து ஆசி வழங்கினார்.
இப்பண்டிகையில் விளாத்திகுளம் நவமணி டைட்டஸ் பஜனை பிரசங்கம் செய்தார். குருவானவர்கள் அருட்திரு. இம்மானுவேல் சாம்ராஜ், அருட்திரு. டேனியல் தனசன், அருட்திரு. ஜாண் சாமுவேல், அருட்திரு. பிரடெரிக் சத்திய சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பண்டிகை ஏற்பாடுகளை சேகர குருவானவர் அருட்திரு ரிச்சர்ட் சாமுவேல் தலைமையில் திருச்சபை மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.