தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: ஆயுத கிடங்கு வெடித்து 8 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவில் ஆயுத கிடங்கு ஒன்று வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகரமான கேப் டவுனில் சாமர்செட் நகரின் மேற்கு பகுதியில் ஆயுத கிடங்கு அடைந்துள்ளது.
இந்த கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த ஆயுத கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், அங்கு இருந்த 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.