ரோஹித் சாதனை சதம் - இந்திய அணி அபார சாதனை

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-டுவெண்டி கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 43 பந்துகளில் 118 ரன்கள் [10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள்] குவித்தார். கே.எல்.ராகுல் 49 பந்துகளில் [8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்] 89 ரன்கள் எடுத்தார்.

சாதனைகள்:

* இந்த போட்டியின் மூலம் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் டேவிட் மில்லருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 35 பந்துகளில் சதம் விளாசியுள்ளனர்.

* அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து இது அதிவேகமான அரைச் சதமாகும். முன்னதாக கிறிஸ் கெயில் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 30 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதேபோல யூசுஃப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்து இருந்தார்.

* ரோஹித் சர்மாவுடன் சேர்த்து 5 பேர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு முறை சதமடித்துள்ளனர். முன்னதாக கிறிஸ் கெயில், ஏவின் லெவிஸ், பிரண்டன் மெக்கல்லம், கோலின் மன்றோ ஆகியோர் இரண்டு முறை சதமடித்துள்ளனர்.

* இந்த போட்டியில் ரோஹித் சர்மா 10 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் போது 7 சிக்ஸர்கள் விளாசியிருந்ததே அதிகப்பட்சமாகும்.

* அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து இந்த ஆண்டு 64 சிக்ஸர்கள் அடித்துள்ளார். முன்னதாக 2015ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 63 சிக்ஸர்கள் விளாசி இருந்தார்.

* இந்த போட்டியில் 118 ரன்கள் குவித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக ராகுல் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 110 ரன்கள் எடுத்திருந்தார்.

More News >>