நானும் சொல்கிறேன்.. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக: ஸ்டாலின் சவால்

பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட இளம்பெண்ணை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, மு.க.ஸ்டாலின் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்ததும் அங்கிருந்த சோபியா என்ற பெண் திடீரென பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனால், தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழிசை சோப்பியாவுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சோபியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சோபியாவை கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன் தெரிவித்ததுடன், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ட்விட்டரில் வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில், “ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.

அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள் ?. நானும் சொல்கிறேன் ! பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக ! ” என பதிவிட்டுள்ளார்.

More News >>