பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்றும் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சை எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து ஏற்றத்தை கண்ட பெட்ரோல், டீசல் விலை மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் சரிவை சந்தித்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 35 காசுகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியை சந்தித்தனர்.இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, டீசல் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.75.39 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்எதிரொலியால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.