தலைவர்களுக்கு எது அழகு..? ஜி.ராமகிருஷ்ணன் அறிவுரை
விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்கி, அரசியல் கட்சி தலைவர்கள் பக்குவமின்றி நடந்து கொள்வது அழகில்லை என ஜி.ராமகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பேசிய ஜி.ராமகிருஷ்ணன், " 24 மணி நேரம் குடிநீர் விநியோகத்திற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிர்வாகத்துடன் போட்டுள்ள ஒப்பந்ததை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற உள்ள சாலைமறியலுக்கு முழு ஆதரவு"
"மாணவி சோபியா விவகாரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மனித உரிமையை பறிக்க கூடிய நிலையை மத்திய மாநில அரசு மேற்கொண்டுள்ளது. பெண்ணின் தந்தை பாஜக தலைவர் மீது புகார் அளித்துள்ளார், ஆனால் அந்த புகார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை."
"அரசியல் கட்சி தலைவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என புகார் அளிப்பது, மாநில தலைவருக்கு அழகில்லை.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலையை கொண்டு வந்தால் 1 கோடி ரூபாய் என அறிவிப்பை வெளியிட்டனர், ஆனால் தொண்டர்கள் ஆவேசத்தில் பேசுவதை எல்லாம் பெருதுபடுத்த முடியாது, அமைதியாக தான் இருந்தார்." என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.