ரஜினி அரசியல் பிரவேசத்தில் எந்த சந்தேகமும் இருக்காது - தமிழருவி மணியன்
டிசம்பர் 31ஆம் தேதிக்கு பின் அரசியல் பிரவேசம் குறித்து எந்த சந்தேகமும் இருக்காது என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
கடந்த 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 67ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். முன்பாக ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ரசிகர்களை சந்தித்து வந்தார்.
இதனால், தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினியை நண்பரும் அரசியல் பிரமுகருமான தமிழருவி மணியன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழருவி மணியன், ”டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்கும் ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி தனது அடுத்தக் கட்ட திட்டம் பற்றி அறிவிப்பார். அதன்பின், அவரின் அரசியல் பிரவேசம் குறித்து எந்த சந்தேகமும் இருக்காது” என்று கூறியுள்ளார்.