நடிகை பாவனாவுக்கு டும் டும் டும்..
நடிகை பாவனாவுக்கும் தொழிலதிபர் நவீனுக்கும் வரும் ஜனவரி 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
கேரளாவை சேர்ந்த பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடத்தபோது கன்னடத் தயாரிப்பாளரும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனை காதலித்தார். இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால், அதற்குள் பாவனா வாழ்க்கையில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டது. மன அழுத்தத்தில் இருந்த பாவனாவுக்கு உடன் இருந்து நவீன் ஆறுதலாக இருந்துள்ளார். இதையடுத்து, பாவனாவுக்கும் நவீனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது, இருவருக்கும் திருமணம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும், வரும் ஜனவரி 22ம் தேதி திருமணம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.