என்னை நோக்கி பாயும் தோட்டா.. ஒரு வழியாக ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் கவுதன் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இடையிடையே நிறுத்தப்பட்டு சமீபத்தில் மீண்டும் தொடங்கி நேற்றுடன் நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை படப்பிடிப்பின் இறுதி நாளாவ நேற்று அறிவிக்கப்பட்டது. அதாவது. என்னை நோக்கி பாயும் தோட்டா வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது என்றும் ஹேப்பி தீபாவளி என்றும் படக்குழுவினர் கேக்வெட்டி அறிவித்தனர்.
இந்த படத்தில் தனுஷ¨க்கு ஜோடியாக மேகா ஆகாஷ், சுனைனா, இயக்குனர் சசிகுமார் நடித்துள்ளனர். தர்புகா இசைமைத்துள்ளார்.