பல குரல் மன்னன் ராக்கெட் ராமநாதன் காலமானார்
தமிழகத்தின் முதல் மிமிக்ரி கலைஞர் ராக்கெட் ராமநாதன் காலமானார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தவர் ராக்கெட் ராமநாதன். தமிழின் முதல் மிமிக்ரி கலைஞர் ஆவார்.
இவர் ஒருபுல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.மேலும் தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர்.
வறுமையில் வாடிய 74-வயதான ராக்கெட் ராமநாதன் கடந்த 2 வருடமாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள இல்லத்தில், ராக்கெட் ராமநாதனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.