உலகுக்கு நீங்களே கை விளக்கு! - ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை
செப்டம்பர் ஐந்து..கல்விக்கூட ஆலயத்தில்எழுத்தறிவித்த இறைவன்களைநினைவுகூறும் திருநாள்..அறிவின் திறவு கோலாம்ஆசிரியர் தின நாள்!
ஆசிரியர்களே.. எங்கள் ஆசான்களே..நீங்கள் உருவில்எம்மைப் போல மனிதர்கள்தான்என்றாலும்,காலத்தால் அழியாதகல்வி தருவதால்நிலத்தில் நீங்கள் என்றும் புனிதர்கள்தான்!
கருவறை சுமந்த அம்மாஉயிர் தந்தாள்..தோள்கள் வலிக்கும் வரைசுமந்த அப்பாஅன்பு தந்தார்..ஆனாலும்வகுப்பறையில் சுமந்தநீங்களன்றோஏற்றம் தந்தீர்..உலகையே அறிவால்வென்று சாதிக்கிறஆற்றல் தந்தீர்..!
நீங்கள்வகுப்பறை எனும்அறிவு விளைவிக்கிறநிலந்தனில்பாட நூல் ஏர்ப் பூட்டிசீருடைப் பயிர் வளர்த்தீர்..வளர்த்த பயிர்களில்சோடைனெ்று எதுவுமில்லை..வகுப்பறைத் தேர்வில்மட்டுமல்ல..வாழ்க்கைத் தேர்வுகளிலும் அவர்தோல்வி கண்டு வாடவில்லை..!
ஆம் ஆசிரியர்களே..மருத்துவர்கள்பொறியாளர்கள்கவிஞர்கள்ஓவியர்கள் எனநீங்கள்ஊன்றிய கல்வியெனும்வீரிய வித்துக்களால்முப்போக விளைச்சல்அமோகமாய்..அதனால்தானேகுடிசையும் உள்ளதுகல்வியின் மீதுபெரும் மோகமாய்!
ஆசிரியர்களே..நாங்கள் வெறும் நிலவுதான்..நீங்களோ சூரியன்அறிவு ஒளிதந்துஇருளாய் மூழ்கிப் போகாது..பௌர்ணமியாய்மாணவர்களைபிரகாசமாயிருக்கவைக்கிறீர்..!
ஆசிரியர்களே..நீங்களும் காற்றும்ஒரே வகை..அதனாலன்றோசாதி, மதம்ஏழை, பணக்காரர்வித்தியாசம் பாராமல்எல்லோருக்குமான சுவாசமாய் இருக்கிறீர்அதிகாரங்களுக்கு அஞ்சாதுநீதி தேவதையெனும்மனச் சாட்சிக்கு மட்டுமேவிசுவாசமாய் இருக்கிறீர்!
ஆசிரியர்களேநீங்கள் நெருப்பைப் போல..இருளை வெளுத்துவெளிச்சம் தரவும்,அறியாமை கொளுத்திபுரிதல் புகட்டவும் நீங்களேஉலகுக்கு கை விளக்குமாணவர் உயர்வேஉங்கள் இலக்கு!
ஆம் ஆசிரியர்களே..இந் நாள் மட்டுமல்ல..இனி தினந்தோறும் உங்கள்தியாகம் போற்றிடுவோம்..உங்கள் புகழ்க் கொடியைமாணவர் பெற்றோர்இதயங்கள் தோறும்ஏற்றிடுவோம்!
- அல்லிநகரம் தாமோதரன்