நயன்தாரா, த்ரிஷா வரிசையில் பிக்பாஸ் பிரபலம்
பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா வரிசையில் பிக் பாஸ் பிரபலம் நடிகை ஓவியா இருக்கிறார்.
ஆடி முடிஞ்சு ஆணி வந்ததும் அவன் டாப்புல போய்டுவாங்கிற மாதரி, பிக்பாஸ் முடிஞ்சதும் நடிகை ஓவியா டாப்புக்கு போயிட்டாரு. சன்னி லியோனைவிட ஓவியாக்குத்தான் அதிக ரசிகர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு, ஓவியாவை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டாப்போட்டி நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், கதையின் முக்கியத்துவத்தை வைத்தே ஓவியா படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வரிசையில், ராகவா லாரன்ஸ் ஜோடியாக காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார் ஓவியா.
இதைதொடர்ந்து, பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் ஒன்றில் ஓவியா நடிக்க போகிறாராம். இதுகுறித்த அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவாராம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்த வரும் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரின் வரிசையில் தற்போது ஓவியா இடம்பிடித்திருக்கிறார்.