இதற்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை- ராஜீவ் குமார்
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “குறிப்பிட்ட காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதத்தில் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை, ஜூலை மாதத்தில் சரிவை கண்டது.
இதனால், சர்வதேச சந்தையை பொருத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மாறும். எனவே விலை குறையும் சூழ்நிலை விரைவில் வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவவே, இதற்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக மத்திய அரசின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது” என்று ராஜீவ் குமார் கூறியுள்ளார்.