எத்தியோப்பியாவில் கனமழை-நிலச்சரிவு- 12 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியா நாட்டின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டாவ்ரோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில், மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், நிலச்சரிவில் சிக்கி பலத்த காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.