தமிழகத்தில் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தியது.இதனால், தமிழக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், தமிழக மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுமார் 3200 ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இனி எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருந்தாலும் அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலை வராது.இவ்வாறு அவர் கூறினார்.