நடிகர் தேவானந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை ரத்து

டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தேவானந்த்துக்கு  விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, கடந்த 2006 ஏப்ரல் மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.   திருமணம் செய்து கொள்ளும்படி, டிவி நடிகர் தேவானந்த், வைஷ்ணவியை வற்புறுத்தியதுடன், யாருடனும் வாழ விடப் போவதில்லை என மிரட்டியதாலும், தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக வைஷ்ணவியின் பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.   இந்த புகாரின்படி, நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் தேவானந்த் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம், தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து  2011ஆம் ஆண்டு அக்டோபரில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தேவானந்த் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி பொங்கியப்பன், குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, தேவானந்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
More News >>