3,000 ஆசிரியர்கள் நியமனம்...கல்வித்துறை உத்தரவு...
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 3000 காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை, நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கு தற்போது வாய்ப்பு இல்லாத நிலை நிலவுகிறது. எனவே, தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அந்தந்த பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், காலி பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் எனவும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து சம்பளம் வழங்கிக்கொள்ளலாம் எனவும், கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியருக்கு மாதம் 7,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.