தனி ஒருவன்- 2வில் வில்லனாக களமிறங்கும் மம்மூட்டி ?
இயக்குனர் மோகன் ராஜா இயக்கி கடந்த 2015ல் வெளியான தனி ஒருவன் திரைப்படம் தனித்து நின்று வெற்றி பெற்றது. அரவிந்த் சாமி, ஜெயம் ரவி, நயன்தாரா, என பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தனர். அரவிந்த் சாமிக்கு தனித்துவமான கதாபாத்திரத்தை அமைத்து கொடுத்து இருந்தார் இயக்குனர் மோகன் ராஜா.
படம் வெளியாகி சுமார் 3 வருடங்கள் முடிவடைந்துள்ளன. தற்போது தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இயக்குனர் மோகன் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர்.
தனி ஒருவன் படத்தில் நடிகர் அரவிந்த் சாமியின் பாத்திரம் சிறப்பாகவும் மிகவும் பலம் வாய்ந்ததாகவும் அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது இரண்டாம் பாகம் எடுத்தால் ரசிகர்கள் படத்தில் நடிக்கும் வில்லன் நடிகர் மிகவும் பலம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று யூகிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் பலம் வாய்ந்த வில்லன் நடிகராக நடிக்கவைக்க நடிகர் மம்மூட்டியை சந்தித்து கதை சொல்ல பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனி ஒருவன் முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி இரண்டாம் பாகத்தில் காவல்துறை எஸ்.பி.யாக நடிக்கவுள்ளார். நயன்தாரா தடயவியல் நிபுணராக நடிக்கவுள்ளார். படத்தில் இன்னொரு நடிகையாக நடிக்க சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.